தேசிய நெடுஞ்சாலையில் வீசப்படும் கழிவுகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு 

தேசிய நெடுஞ்சாலையில் வீசப்படும் கழிவுகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு 

புறவழி சாலையில் ரிங் ரோடு பஞ்சப்பூர் முதல் தஞ்சை ரோடு துவாக்குடி வரை குறிப்பாக திருமலைசமுத்திரம் பஞ்சாயத்து எல்லைப்பகுதி சாத்தனூர் கிழக்கு எல்லைப் பகுதி குமாரமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளிலும் ஓலையூரின் அருகிலும்  திருச்சி புறவழிச்சாலை ரிங் ரோட்டில் இரவு நேரங்களில் செல்லும் லாரிகள் மூலமாகவும் மக்கும் மக்காத கழிவுகளை வீசி செல்கிறார்கள்.  கோழி கழிவுகளையும் சாலையோரங்களில் கொண்டு வந்து கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.

சாலையில் கடந்து செல்லும் கனரக வாகனங்களுக்கு கழிவுகளை உண்பதற்காக வரும் ஆடு மாடுகளால் விபத்து ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் உயிர் சேதம் ஏற்படும் நிகழ்வுகளும் நடந்து உள்ளது.
 இது பொதுமக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காற்று அடிக்கும் நேரங்களில் தூசி சாலையில் பறக்கின்றன.மக்கும் மக்காத குப்பைகள் அனைத்தையும் ஒன்று சேர லாரிகளிலும் எங்கிருந்து வந்து கொட்டுகிறார்கள் என்று கூட தெரியவில்லை. ஆனால் இரவு நேரங்களில்  அதிகபடியான கோழி கழிவுகள் மக்கும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால்  அப்குதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும் கோழி கழிவுகளை  உண்பதற்காக வரும் நாய்கள் சாலையின் குறுக்கே  செல்வதால் பல நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே இதனை உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்  விவசாயம் காக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர் மக்கள் பாதை இயக்கம் காசிராஜன் திருச்சி மற்றும்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் .இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த திருச்சி புறவழி சாலையில் எப்போதும்  மக்கும் மக்காத குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன குறிப்பாக சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு இது மிக முக்கிய  காரணியாக அமைகிறது எனவே இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் காரைக்குடி மண்டிலம் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமும் இதுகுறித்த மனுவையும் அளித்துள்ளேன் .
நம்மை நாமே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ஆனால்  இதுபோன்ற  தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு  பொதுமக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொதுமக்களுக்கான சாலைகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் பொழுதுதான் தவறுகளை உணர்ந்து அவர்கள் அதற்கான இடங்களில் சரியான முறையில் குப்பைகளை அப்புறப்படுத்துவதில்   பொறுப்பாகவும் செயல்படுவார்கள் என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I