திருச்சியில் மணிகன்டம் ஒன்றிய பிரதிநிதிகளுக்கான திட்ட விளக்க கூட்டம்!!

திருச்சியில் மணிகன்டம் ஒன்றிய பிரதிநிதிகளுக்கான திட்ட விளக்க கூட்டம்!!

மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பிரதிநிதிகளுக்கான திட்ட விளக்க கூட்டம், மணிகன்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவரான கமலம் கருப்பையா தலைமை வகிக்க, துணை தலைவர் புவனேஸ்வரி சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் வேத லக்ஷ்மி முன்னிலை வகுத்தனர். செயல் அலுவலர் திருமுருகன் திட்ட விளக்க உரை வழங்கி, சிவசுப்பிரமணியன் உதவி திட்ட அலுவலர், மகளிர் திட்டம், சிறப்பு உரை வழங்கினார்.

Advertisement

 வட்டார அணி தலைவர், ம.சம்பத் குமார் வரவேற்புரை வழங்கினார். இத்திட்டத்தின் திட்ட நிர்வாகிகள் A. நாகஜோதி , P. பொன்னழகு , வட்டார இயக்க மேலாளர் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள் இக்கூட்டத்தில் உடன் இருந்தனர். 

 மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்-ன் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டத்தின் வட்டார அளவிலான ஊராட்சி பிரதிநிதிகளுக்கான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான அணி மக்கள் அமைப்புக்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இத்திட்டத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களே முதன்மை பயனாளிகள் ஆவர். இத்திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதோடு ஊரக சமுதாயத்தில் நிலைத்த உயர்வினை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm