வாழை விவசாயிகளை வாழ வைக்குமா? தமிழக அரசு  

வாழை விவசாயிகளை வாழ வைக்குமா? தமிழக அரசு  

இந்தியாவிலேயே வாழை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதன்மையாக இருப்பது தமிழ்நாடு. திருச்சி ,கரூர் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாழை உற்பத்தி அதிகளவில் உள்ளது .
7100 ஹெக்டேர் பரப்பளவில் வாழை விளைவிக்கப்படுகிறது இது கடந்த ஆண்டைவிட ஆயிரம் ஹெக்டேர்  அளவு அதிக அளவிலானது.


 மற்ற வகைகளை விட பூவம்பழமும் நேந்திரம்பழமும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
நேந்திரம் பழம்  கேரளாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 மற்ற வகை வாழைப்பழங்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகிறது.


கொரனா காலக்கட்டத்தில்  9 மாதத்திலேயே வாழை உற்பத்தி 1.43 லட்சம் டன் மதிப்பு 1.6 மில்லியன் டாலராக இருந்தது.
 விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு திருச்சியில் தலைமை இடமாக கொண்ட தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டது.


 எனினும் இங்கிருந்து செய்யப்படும் ஏற்றுமதிப் பொருட்களின் அளவு மிகக் குறைவாகவே இருக்கின்றன.
 கேரளா ,மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் வாழை  ஏற்றுமதி  மிகக்குறைவாகவே நடைபெறுகிறது.
 வரப்போகிற தமிழக அரசு வாழை மற்றும் வாழைப்பொருட்களை   தமிழ்நாட்டில் இருந்து அயல் நாடுகளுக்கு அதிகளவில்  ஏற்றுமதி செய்ய வேண்டும் ,வாழை விவசாயிகள்  மிகக் குறைந்த அளவில் அவர்களே தங்களுடைய விலை பொருட்களை விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் இந்நிலை மாறி வாழை விவசாயிகளை  தமிழக அரசுதான் வாழ வைக்க வேண்டும் என்று காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW