சூரியன் FM திருச்சி சாரதாஸ் இணைந்து நடத்திய “வர்ணஜாலம் 2019” ஓவிய போட்டி:1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:

சூரியன் FM திருச்சி சாரதாஸ் இணைந்து நடத்திய “வர்ணஜாலம் 2019” ஓவிய போட்டி:1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:

சூரியன் FM திருச்சி சாரதாஸ் இணைந்து நடத்திய “வர்ணஜாலம் 2019′ ஓவியப் போட்டி  திருச்சியில்  வயலூர் ரோடு, எம்எம் நகரில் உள்ள “மௌண்ட் லிட்ற ஜீ” பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கவும் அவர்களின் திறமையை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் வர்ணஜாலம் என்கின்ற ஓவியப் போட்டியை பிரம்மாண்டமாக நடத்தியது சூரியன் F.M.

நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு “பசுமை உலகம்” (Green World) என்னும் தலைப்பிலும்,
ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு “கனவு திருச்சி”(Dream Trichy) என்னும் தலைப்பிலும்,
பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு “தமிழ் கலாச்சாரம்”(Tamil Culture) என்னும் தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு முதல் 5 பரிசுகளும் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியின் நடுவர்களாக பெருமாள் ஜெயக்குமார் சீனிவாசன் சஞ்சீவி ஆகியோர் செயல்பட்டனர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா, சௌடாம்பிகா கல்வி குழும ராஜ்மோகன் நடராஜன் ஆகியோர் வழங்கினர் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை சூரியன் FM  நிலைய பொறுப்பாளர் பிரதீப் முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அபிராமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஓவியப் போட்டிக்கு வந்திருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக சூரியன் FM கலைநிகழ்ச்சிகளும் மற்றும் பட்டிமன்றங்களும் நடைபெற்றன.