திருச்சியில் வேளாண் சட்டத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!!

திருச்சியில் வேளாண் சட்டத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!!
This image has an empty alt attribute; its file name is IMG-20200928-WA0035-300x203.jpg

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான புதிய சட்டங்களை எதிர்த்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ், மதிமுக, இ.கம்யூ, மார்க்சிஸ்ட், விடுதலைசிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஐஜேகே, கொங்கு மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், மற்றும் விவசாய சங்கங்கள் கட்சியினர் பங்கேற்றது. விவசாயிகள் சங்கத்தினர் பெருந்திரளாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு கலந்துகொண்டனர்.

This image has an empty alt attribute; its file name is IMG-20200928-WA0036-300x133.jpg

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு….
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றி. இந்த வெற்றி சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடரும்.
திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்றார்.

Advertisement