திருச்சி சர்வீஸ் ரோடு பணிகள் - உடனடியாக ஆரம்பிக்க அனைத்துக்கட்சியினர் ஆர்பாட்டம்!!

திருச்சி சர்வீஸ் ரோடு பணிகள் - உடனடியாக ஆரம்பிக்க அனைத்துக்கட்சியினர் ஆர்பாட்டம்!!

திருச்சி பால்பண்ணை -  துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில்  அனைத்து கட்சியினர் சார்பில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பால்பண்ணை- துவாக்குடி சர்வீஸ் ரோடு பணியினை உடனடியாக தொடங்கவும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி 15.10.19 அன்று முடிந்திருக்க வேண்டும்.  ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி கூட இன்னும் தொடங்கப்படவில்லை.

Advertisement

எனவே இதனை கண்டித்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பலர் அரியமங்கலம் பகுதியில் கலந்து கொண்டனர்.

Advertisement